செந்தோசா கடற்கரையில் எண்ணெய் படலங்கள்!! பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

செந்தோசா கடற்கரையில் எண்ணெய் படலங்கள்!! பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

இன்று(ஜூன் 15) செந்தோசாவின் அனைத்து கடற்கரைகளும் மூடப்படும். பாசிர் பாஞ்சோங் துறை முகத்திற்கு அருகே எண்ணெய் கசிந்ததே இதற்கு காரணம்.

கரையில் பொதுமக்கள் இருக்கலாம். ஆனால் கடலில் நீச்சல் அடிப்பதோ அல்லது வேறு எந்த கடல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதி கிடையாது.

இது குறித்து செந்தோசா கோவ் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களிடம் இன்று காலை 7 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எண்ணெய் படலங்கள் பாலவான்,சிலோசொ,தஞ்சொங்,செந்தோசா கோவ் ஆகிய கடற்கரைகளில் தென்பட்டன.

பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே நகரமால் நின்று கொண்டிருந்த கப்பல் மீது கனரக கப்பல் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று(ஜூன் 14) நடந்தது.

நகராமல் நின்று கொண்டிருந்த கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்தது.