மிகப்பெரிய தங்க கடத்தலை தடுத்த அதிகாரிகள்!! கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் விடுவிப்பு!!

மிகப்பெரிய தங்க கடத்தலை தடுத்த அதிகாரிகள்!! கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் விடுவிப்பு!!

ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 146 கிலோகிராம் தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு HK$84 மில்லியன் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏர் கம்ப்ரசர்களின் உள்பாகங்கள் உருக்கிய தங்கத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தன.

அவை ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு விமானம் மூலம் கடத்தப்படவிருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜப்பானில் வரி ஏய்ப்பு செய்வதற்காக தங்கத்தை இவ்வாறு கடத்த முயன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கடத்தல் தொடர்பாக நிறுவனத்தின் இயக்குனராக கருதப்படும் 31 வயதான நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற கடத்தல் குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக HK$2 மில்லியன் அபராதமும் விதிக்கப்படலாம்.