
சிங்கப்பூர் சென்ற நமது Subscriber- இன் புது அனுபவம் பற்றி தெளிவாக காண்போம்!
இது என்னுடைய சிங்கப்பூர் புது அனுபவம். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.சிங்கப்பூர் வந்தவர்கள் தங்களுடைய MRT Card யை தொலைத்து விட்டால் என்ன செய்யலாம்? என்பதைப் பற்றி கூறுகிறேன்.
நான் சிங்கப்பூர் வந்தவுடன் என் நண்பருடைய MRT கார்டைப் பயன்படுத்தினேன்.அதில்,$110 சிங்கப்பூர் டாலர் இருந்தது.இந்தியா ரூபாய் மதிப்புப்படி ₹.6,726.51.நான் அதனை தொலைத்து விட்டேன்.அதன்பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.இங்கு வேலை செய்து கொண்டிருக்க்கும் பழைய ஆளுங்களிடம் ஐடியா கேட்டோம்.கார்டில் உள்ள பணத்தை வாங்க முடியுமா?அல்லது புது கார்டு வாங்கி தொலைந்த கார்டில் இருக்கிற பணத்தை மாற்றி கொள்ளலாமா? என்று கேட்டோம். ஆனால், யாருக்கும் எதும் தெரியவில்லை. எல்லோரும் கூறிய ஒரே பதில்,“புதிதாக MRT கார்டு வாங்கிட்டு போங்கள்´´ என கூறினார்கள்.
ஆனால், நாங்கள் எங்களுடைய முயற்சியை கைவிடாமல் தொலைந்த பணத்தை எப்டியாவது திரும்ப பெற வேண்டும் என்று நினைத்தோம். அதன்பின், எங்களுக்கு ஓர் வழி கிடைத்தது.EZ-Link App யை பயன்படுத்தினோம். எங்களுக்கு வழியும் கிடைத்தது.
MRT கார்டை EZ-Link App – இல் பதிவு(Register) செய்து இருந்தோம். அதில், பதிவு செய்திருந்ததால் தொலைந்து போன MRT கார்டில் உள்ள பணம் பேங்க் அக்கௌன்ட்க்கு(Bank Account) 4-6 நாட்களில் திரும்ப வந்துவிட்டது.
குறிப்பு : நீங்கள் பயன்படுத்தும் கார்டு EZ-Link App – இல் பதிவு(Register) செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான், தொலைந்து போன கார்டை EZ-Link App மூலம் ப்ளாக்(Block) செய்ய முடியும். ப்ளாக் பண்ணும்போது, பேங்க் அக்கௌன்ட்(Bank Account) நம்பர் கேட்கும். அதனை கொடுத்த பிறகு, பணம் திரும்ப வந்துவிடும்.
இந்த நடைமுறை இதற்குமுன் நடப்பில் இல்லை. இவ்வாண்டு மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
