2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை?

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை?

தாய்லாந்தின் பொருளாதாரம் கோவிட் நோய் தொற்று,சுற்றுலாப் பயணிகளின் மாறிவரும் விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் சென்றிருந்தனர். அதேபோல மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்றனர்.

2024 ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொற்றுநோய்க்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சுமார் 40 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக நாட்டின் விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தாய்லாந்துக்கு சுமார் 39 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.