இந்தியாவில் Paytm,Google Pay, Phone pay போன்ற பணவர்த்தனைச் செயலிகளை 6 மாதங்களுக்குள் 90 முறைக்கு மேல் அனுப்பினால் வரிப்பிடித்தம் செய்யப்படும். கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு வங்கிகள் அறிவித்துள்ளது. இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது.
Paytm,Amazon Pay,Phonepe,Google pay போன்ற செயலிகளில் ஒரு வங்கி கணக்கைப் பயன்படுத்துகிறோம்.
இனிமேல் ஆறு மாதத்திற்குள் ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பணவர்த்தனைச் செயலிகளில் பயன்படுத்த முடியும்.
90 முறைக்கு மேல் பயன்படுத்தினால் சில வங்கிகள் அதற்காக கட்டணம் வசூலிக்கின்றன.
அனைத்து வங்கிகளும் இந்த புதிய மாற்றத்தால் வரியை மேற்கொள்ளவில்லை.
சில வங்கிகள் மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கிறது. வங்கிகள் இந்த வரிப்பிடித்தம் செய்வதற்கு தனி பெயர் வைத்துள்ளனர்.
இதனைத் துறைச் சார்ந்த கட்டணம் என்று குறிப்பிட்டுள்ளது.யு.பி.ஐ மூலமாக 90 முறை இலவசமாக கட்டணம் செலுத்தலாம். 91-வது முறைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
அதாவது 91-வது முறையிலிருந்து ஒவ்வொரு முறை கட்டணம் செலுத்தும் போதும் 2 ரூபாய் 25 காசு கட்டணம் மற்றும் வரி பிடித்தம் செய்யப்படும்.
அதன்பின் ஒவ்வொரு முறை யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தும் போது ரூபாய் 2.65 காசு பிடித்தம் செய்யப்படும்.
ஒரு வருடத்தில் ஆறு மாதங்களை வங்கிகள் பிரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலும் பிரித்துள்ளது.
பிரிக்கப்பட்ட ஆறு மாதத்தில் பணவர்த்தனைச் செயலிகளின் மூலம் எவ்வளவு பணம் செலுத்தி உள்ளீர்கள் என்று கணக்கிடுகிறார்கள்.
கணக்கிடும்போது ஆறு மாதத்தில் 90 முறைக்கு மேல் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தியிருந்தால்,91-வது முறைக்கு ரூபாய் 2.25 காசு மற்றும் ஜி.எஸ்.டி வரி பிடித்துக் கொள்வார்கள்.
இந்த புதிய திட்டம் எல்லா வங்கிகளுக்கும் கிடையாது.
உங்கள் வங்கி இந்த புதிய திட்டத்தின் மூலம் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் நீங்கள் வரி செலுத்த வேண்டுமா? என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.