மோட்டார் சைக்கிள்கள் சோதனை சாவடியை எளிதாக கடக்க இனி QR குறியீடு....!!
சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் QR குறியீட்டைப் பயன்படுத்தி கடப்பது எளிதாக இருக்கும்.
தரைவழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விரைவுத் தகவல் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இனி பாஸ்போர்ட் பயன்படுத்தாமல் சோதனை சாவடிகளை விரைவாக கடந்து செல்லலாம்.
மேலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்காது.
இது பயணிகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் சோதனைச் சாவடியைக் கடக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
குடிநுழைவு சோதனை சாவடியின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
ஒரே விரைவுத் தகவல் குறியீட்டின் கீழ் பல பயணிகளின் விவரங்களை உள்ளிடலாம்.
பல பாஸ்போர்ட்களை சோதனை இடுவதற்கு பதிலாக ஒரு விரைவான தகவல் குறியீட்டைச் சரிபார்க்கும்போது நேரம் குறைகிறது.
இதனால் பயணிகள் விரைவாக சோதனை சாவடியை கடக்க முடிகிறது.
Follow us on : click here