Singapore Breaking News in Tamil

இனி, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் NETS QR, DuitNow QR மூலம் பணம் செலுத்தலாமா?

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் கட்டணமுறைத் தொடர்பை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக புதிய QR கட்டணம் செலுத்தும் முறையை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இருநாட்டு மக்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் NETS QR, DuitNow QR போன்ற குறியீடுகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.

கடைகளில் இருக்கும் DuitNow QR அல்லது NETS QR யை ஸ்கேன் செய்து பணத்தைச் செலுத்தலாம்.

இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் நாணய வாரியமும்,Bank Negara மலேசியாவும் இணைந்து அடுத்த கட்டமாக கட்டணமுறை தொடர்பை வங்கி பரிவர்த்தனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடுகிறது.

PayNow, DuitNow உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி கைத்தொலைபேசி எண் வழி மூலம் பண பரிவர்த்தனையை இரு நாட்டுக்கும் இடையே செய்ய வழிவகுக்கும்.

இந்த சேவை இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.