Latest Singapore News

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் ரயில் சோதனை சாவடியில் அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை!

சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் ரயில் சோதனை சாவடி வழி மூலம் தற்போது தினந்தோறும் சுமார் 10,000 பயணிகள் 31 ரயில் பயணங்களில் பயணம் செய்கின்றனர்.

அங்கே கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் புதிய குடிநுழைவு சோதனை முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு 10 புதிய குடிநுழைவு சோதனை முகப்புகள் மார்ச் மாதத்திலிருந்து அமைக்கப்பட்டன.

தகுதி உடைய பயணிகள், தானியங்கு பாதைகளில் குடிநுழைவு சோதனைகளைப் போலவே புதிய முகப்புகளில் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து கொள்ளலாம்.

அதனால் பயணிகளின் காத்திருக்கும் நேரம் குறைகிறது. கூட்ட நெரிசலும் குறைகிறது.

கூடுதல் தானியங்கி பாதைகளை உட்லண்ட்ஸ் ரயில்வே சோதனைச் சாவடியில் இடப் பற்றாக்குறை காரணமாக அமைக்க முடியவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டது.

மேலும், சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளும் சிங்கப்பூர் வரும் பயணிகளும் அவற்றைப் பயன்படுத்தலாம்.