சிங்கப்பூர் வங்கிகளில் இனி OTP முறை இல்லையா?

சிங்கப்பூர் வங்கிகளில் இனி OTP முறை இல்லையா?

சிங்கப்பூரில் தொடர்ந்து மின்னஞ்சல் மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.அதனை தடுப்பதற்கான முயற்சியில் பெரிய வங்கிகள் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளன.

இனி படிப்படியாக ஒரு முறைக் கடவுச்சொல் எனும் OTP முறை நீக்கப்படும்.

இதனை சிங்கப்பூர் நாணய வாரியம் மற்றும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் ஆகிய இரண்டும் தெரிவித்துள்ளது.

அது அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த மாற்றத்தை DBS, OCBC, UOB போன்ற வங்கிகள் செயல்படுத்த உள்ளன.

ஹேக்கர்கள் OTP ஐ திருடலாம் அல்லது பயனாளர்களை ஏமாற்றி OTP ஐ பெற முயற்சி செய்து அதைப் பெற்று விடுகின்றனர்.

டிஜிட்டல் டோக்கன்களை பயன்படுத்தினால் கூடுதல் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.