வறுமையில் சிக்கி தவிக்கும் நைஜீரியா ...!!! உணவுக்காக திண்டாடும் மக்கள்...!!
நைஜீரியாவில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அங்கு உணவுப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
நைஜீரியாவில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
எனவே உலகில் அதிகமான மக்கள் பசியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்று.
லாகோஸ் நகரில் வாழும் மக்கள் தற்போது உணவு வங்கிகளையே நம்பியிருக்கிறார்கள்.
லாகோஸ் உணவு வங்கி 2016 இல் தொடங்கப்பட்டது.
உண்மையில், அதன் தேவை பல ஆண்டுகளாக பெருமளவில் அதிகரித்துள்ளது.
உணவு தேடி வருபவர்களுக்கு தேவையான பொருட்களை தன்னார்வலர்கள் தயார் செய்கின்றனர்.
உணவு வங்கிகள் இப்போது நைஜீரியர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகிவிட்டது.
அங்குள்ள மக்கள் சத்தான உணவுகளை வாங்க வழியில்லை.
குழந்தைகளுக்கு சாப்பிட போதுமான உணவு இல்லை.
மக்கள் பசியை போக்கிக் கொள்ள கிடைத்ததைச் சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது.
Follow us on : click here