
சிங்கப்பூரில் உள்ள தெங்கா வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டு திட்டத்தின்கீழ் மேலும் 3,000 புதிய வீடுகள் விற்பனைக்கு வர உள்ளன.
அது வரும் செவ்வாய்கிழமை (மே-30) தொடங்கவிருக்கிறது
விற்பனைக்கு வரும் மொத்த வீடுகளில் அது பாதிக்கும் அதிகம்.
சுமார் 30,000 வீடுகளை தெங்கா வட்டாரத்தில் கட்டுவது வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் திட்டம்.
அவற்றில் 70 சதவீத வீடுகள் விற்பனைக்கு வந்து விட்டன.
சுமார் 3 ஆண்டுகள் Parc Meadow @ Tengah வீட்டுத் திட்டத்துக்கு காத்திருக்கும் காலமாகும்.
கிட்டத்தட்ட 2,000 வீடுகள் அந்த திட்டத்தில் விற்பனைக்கு வருகின்றன.
அது தெங்கா வட்டாரத்தின் மிகப்பெரிய திட்டம்.
Plantation Verge வீட்டுத் திட்டத்துக்கு காத்திருக்கும் காலம் சுமார் மூன்றரை ஆண்டுகள்.
அதில் 970 வீடுகள் விற்பனைக்கு வரும்.
பிள்ளை பராமரிப்பு வசதிகள், சமூக மன்றங்கள், பெருவிரைவு ரயில் நிலையங்கள், புதிய பள்ளிகள் எனப் பல அம்சங்களை தெங்கா வட்டாரத்தில் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்.