புதிதாக பிறந்துள்ள அழிந்து வரும் அரிய வகை சுமத்ரா காண்டாமிருகம்!!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள வே கம்பாஸ் தேசிய பூங்காவில் அழிந்து வரும் அரிய வகை சுமத்ரா காண்டாமிருகம் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த காண்டாமிருகக் குட்டியின் எடை சுமார் 25 கிலோகிராம் ஆகும்.

டெலிலா என்ற பெண் காண்டாமிருகம் இந்த ஆண் காண்டாமிருகக் குட்டியை ஈன்றது.

பெயரிடப்படாத அந்த குட்டி காண்டாமிருகம் இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் இந்த பூங்காவில் பிறந்துள்ள ஐந்தாவது காண்டாமிருகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த குட்டி இந்த ஆண்டு பிறந்த இரண்டாவது சுமத்ரா வகை காண்டாமிருகம் ஆகும்.

உலகில் இந்த வகை காண்டாமிருகங்கள் 80க்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

காலநிலை மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றால் இந்த வகை காண்டாமிருகங்கள் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளன.