2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!!

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும்.

இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும்.

இதில் போட்டிகளை நடத்தும் 3 நாடுகளைத் தவிர, மற்ற அணிகளுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும்.இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன.

இதில், ஓசியானியா கூட்டமைப்பு தகுதிச் சுற்றின் 3வது சுற்றின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் நியூ கலிடோனியாவும் மோதின.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

தோல்வியடைந்த நியூ கலிடோனியா அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்க கூட்டமைப்புகளைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையேயான பிளே-ஆஃப் சுற்றில் வெற்றி பெற்றால், நியூ கலிடோனியா உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.