தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!!

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!!

தாய்லாந்துக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கு மேல் தாய்லாந்தில் இருக்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

தற்போது 60 நாள் இருந்தால் விசா வேண்டும்.இப்போது அது மாற்றப்படவுள்ளது.

சுற்றுலா செல்லும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிகரிப்பதால் அதை தொடர்ந்தது புதிய விசா திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

விசா தேவையில்லை என்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

தென்கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு தாய்லாந்து.அந்நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா முக்கிய துறையாகும்.