சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. தற்போது S-Pass ற்கு புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது.S-Pass மூலம் புதிதாக வருபவர்களுக்கும்,S-Pass மூலம் சிங்கப்பூர் வந்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும். யாருக்கெல்லாம் விதிமுறைகளை மாற்றி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
MOM S-Pass ற்கான விதிமுறைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.முதலாவதாக,S-Pass தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.அதாவது, APT பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வைத்திருக்கும் S-Pass ஊழியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதனுடைய தகுதி,சம்பளம், லெவி உயர்த்தப்படும். இந்த புதிய நடைமுறைப் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று MOM தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, புதிதாக S-Pass மூலம் வருபவர்களின் விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச தகுதி சம்பளம் மூன்று படிகளாக உயர்த்தப்படும். ஏற்கனவே, S-Pass மூலம் சிங்கப்பூரில் இருப்பவர்கள் அதனைப் புதுப்பிக்க முயலும் விண்ணப்பதாரர்கள் அதிக சம்பளம் தேவைப்படும் என்று தெரிவித்தது.
இதனை Sector வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது Finance service sectors களுக்குப் பொருந்தாது. இதைத் தவிர மற்ற அனைத்து secotors(துறைகள்) க்கும் பொருந்தும்.
சம்பளம்: இந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதிலிருந்து விதிமுறை மாற்றப்படுகிறது. பழைய விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்கப்படுவதற்கான சம்பளத் தகுதி 3,000 வெள்ளி. இச்சம்பளம் இருந்தால் மட்டுமே Ip ஒப்புதல் அளிக்கப்படும். அப்பொழுதுதான் S-Pass மூலம் வர முடியும்.Finance service செக்டர்ஸ் க்கு இந்த விதிமுறை கிடையாது. மற்ற அனைத்து sectors களுக்கும் இது பொருந்தும். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதிலேயே நடைமுறைக்கு வந்து விட்டது.
Finance service sectors களுக்கு 3500 டாலர்ஸ்கள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும். பழைய விண்ணப்பதாரர்கள் இதனை புதுப்பிக்க வேண்டி இருந்தால் இந்த 2023-ஆம் ஆண்டில் சம்பளம் அதிகமாகி இருக்க வேண்டும். அவர்களுடைய சம்பளம் 3000 வெள்ளி இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும். அதிகபட்ச சம்பளம் 4500 வெள்ளியாகக் கூட தரலாம். ஆனால்,இது கம்பெனி விருப்பம்.
இந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் சம்பளத் தகுதி 3150 டாலர்ஸ்கள் இருந்தால் மட்டுமே Ip க்கு ஒப்புதல் அளிக்கப்படும்.அதன்பின் S-Pass ஒப்புதல் அளிக்கப்படும். இது அனைத்து sectors களுக்கும் பொருந்தும். Finance service sectors க்கு 3650 டாலர்ஸ்கள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும்.
2025-ஆம் ஆண்டு புதிதாக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கான சம்பளத் தொகுதி 3300 டாலர்ஸ்கள். பழையதை புதுப்பிக்க விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் தகுதி 3300 டாலர்ஸ்கள் இருக்க வேண்டும். இச்சம்பளத் தகுதி இருந்தால் மட்டுமே S-Pass க்கு ஒப்புதல் அளிக்கப்படும். இது அனைத்து sectors களுக்கும் பொருந்தும்.ஆனால், Finance service sector க்கு சம்பளத் தகுதி 3800 டாலர்ஸ்கள் இருக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான S-Pass சம்பளத்தகுதி 3,000 வெள்ளி அதாவது இந்தியா ரூபாய் மதிப்பின்படி 1,84,000 ஆகும். இச்சம்பளம் இருந்தால் மட்டுமே S-Pass க்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
Levi:அடுத்ததாக Levi, இந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 450 டாலர்ஸ்கள்- 550 டாலர்ஸ்களாக உயர்த்தப்படும். 2025-ஆம் ஆண்டு செப்டம்பர்,1-ஆம் தேதிலிருந்து 550 டாலர்ஸ்கள் – 650 டாலர்ஸ்களாக உயர்த்தப்படும்.Levi என்பது கம்பெனிகள் வேலைக்காக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய கட்டணம். இதனை ஊழியர்கள் கட்டத் தேவையில்லை. நாம் என்ன கம்பெனிக்கு வேலை செய்யப் போகிறோமோ, அந்த கம்பெனியே கட்ட வேண்டும். சிங்கப்பூரின் விதிமுறைப்படி வேலைக்கு வரப்போகிற ஊழியர்களிடம் இக்கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.
Quota:Service sectors களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை. Marine,Constructions, Shipyard processing போன்ற sectors களுக்கு மாறி உள்ளது.2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிலிருந்து இந்த sectors களுக்கு 15% ஆக Quota குறைக்கப் பட்டுள்ளது. இதற்குமுன் 18%ஆக இருந்தது. தற்போது 15%ஆக குறைந்துள்ளது.
S-Pass க்கு அதிக கட்டணத்தைச் செலுத்தி போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடாதீர்கள்!