மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் புதிய சேவை..!!!

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் புதிய சேவை..!!!

சிங்கப்பூர்: மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குறைகளை பகிர்ந்து கொள்ள புதிய சேவை அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

இளம் சிங்கப்பூரர்களுக்கான பாலிசி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் இரு வருட கருத்தரங்கில் இது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டன.

இளம் சிங்கப்பூரர்கள் மனநிலை பிரச்சனையில் இருந்து தீர்வு காணவும் மற்றும்

ஆலோசனை பெறவும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் தீர்வு வழங்குவர்.

மனநல பிரச்சனை உள்ளவர்கள் தற்கொலை போன்ற முயற்சிகளுக்கு தள்ளப்படுகின்றனர். தற்கொலை முயற்சி செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஆழ்ந்த மன அழுத்தத்தில் உள்ளவர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மனம் விட்டு பேசுவதற்காகவும் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கூடுதல் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆலோசகர்களும் உள்ளனர்.

ஹெல்ப்லைனை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் இது 4 இலக்க எண்ணாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநல உதவி தேவைப்படுபவர்களுக்காக சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்ட ஆதரவு மையங்கள் உள்ளன.

அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மூத்த பிரதி அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

மனநல பிரச்சனை உள்ளவர்கள் மனம் விட்டு பேசினால் மட்டுமே அவர்களின் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

எனவே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் மூலம் மனநல பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

Follow us on : click here ⬇️