சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கென தொடங்கப்படும் புதிய பள்ளி…!!!

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கென தொடங்கப்படும் புதிய பள்ளி...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆட்டிசம் எனப்படும் தகவல் தொடர்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவ புதிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புத் தேவைகள் கொண்ட சுமார் 300 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தோடு ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில் எனும் பள்ளி செயல்பட உள்ளது.

தகவல் தொடர்பு குறைபாடுள்ள மாணவர்கள் அங்கேயே தங்கி வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி அடிப்படையிலான திட்டம் 10 வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை இல்லத்தில் அவர்கள் வாழ்க்கைத் திறன்களை கற்றுக் கொள்ளலாம்.

வளாகத்தில் காய்கறிகளை வளர்ப்பது மற்றும் பேக் செய்வது எப்படி என்பதை அறிய பசுமை இல்லம் உள்ளது.

சிங்கப்பூரின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மாணவர்கள் புரிந்து கொள்ள ஒரு மாதிரி ரயில் நிலையமும் உள்ளது.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் வகையில் வகுப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இம்மாதிரியான நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படவும் சமூகத்தில் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here ⬇️