சிங்கப்பூர் SATS எனும் விமான முனையச் சேவைகள் நிறுவனமும், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் இணைந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரும் புதிய இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.
வாழ்நாள் கல்வியை ஊக்குவிப்பதற்கு இந்த இணக்கக் குறிப்பு உதவும்.உள்ளுரில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் இது உதவும்.
அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இது உதவும்.
விமானப் போக்குவரத்து, உணவு,வர்த்தகம் முதலிய துறைகளில் உள்ள அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்று பயன் பெறுவர்.
சிங்கப்பூரில் முதன்முறையாக விரிவான இணக்க குறிப்பு கையெழுத்தப் பட்டது. இதுவே முதன்முறை.இதில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
சத்துணவு, நீடித்த நிலத்தன்மை மற்றும் இணையப் பாதுகாப்பு துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவி பெறும் வகையிலும் இருக்கும். அதாவது,அவர்கள் படித்துக் கொண்டே பயிற்சிகளைப் பெறலாம்.
இது போன்று படித்துக்கொண்டே பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர வேண்டும் என்பதே SATS யின் திட்டம்.இதன் மூலமாக சுமார் 300 மாணவர்கள் வாய்ப்புகள் பெற்று பயன் பெறுவர்.