மோசடி சம்பவங்களை குறைக்க வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம்…!!!

மோசடி சம்பவங்களை குறைக்க வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி நடவடிக்கைகளை தடுக்க புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோசடி குற்றங்களை தடுக்க டிஜிட்டல் டோக்கனை உருவாக்குவதற்காக வங்கிகளுக்கு இப்போது சிங்பாஸ் ஃபேஸ் ஐடி தேவைப்படும்.

சிங்கப்பூர் நாணய வாரியம் மற்றும் சிங்கப்பூர் வங்கியாளர்கள் சங்கமும் இணைந்து இந்த தெரிவித்தது.இந்த புதிய நடைமுறையானது அடுத்த 3 மாதங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

சிங்கப்பூர் முக அங்கீகார நடைமுறையின் படி, வாடிக்கையாளரின் முகம் அடையாளம் காணப்படும்.பின்பு தேசிய அளவில் சேகரிக்கப்பட்ட தரவு மூலம் விவரங்கள் சரிபார்க்கப்படும்.

அதன் பிறகுதான் சம்பந்தப்பட்டவரின் மின்னணு அடையாள அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறையின் மூலம் மோசடி செய்பவர்கள் குறுஞ்செய்திகள் மற்றும் OTP கடவுச்சொற்கள் அல்லது வங்கி அட்டைகளை வைத்து ஏமாற்றுவதற்கு தங்களது சொந்த சாதனங்களைப் பயன்படுத்த முடியாது.

இதனால் மோசடி சம்பவங்கள் குறைய வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.