சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.சுற்றுப்புற சேவைத் துறையில் பணிக்கு மாற விரும்புவர்களுக்கான SkillsFuture திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

அதற்காக  தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் சுற்றுப்புறத்துறை அதிகாரிகள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

வேலை மாற விரும்புபவர்களுக்கு முழுநேர 3 மாத பயிற்சி திட்டம் அமைக்கப்படும்.

தூய்மை பசுமை இயக்க கொண்டாட்ட நாள் நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் Heng Swee Keat பேசினார்.

ஊழியர்களுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் மரம் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வளாகத்தில் சுமார் 100,000 மரங்களை 2030-ஆம் ஆண்டிற்குள் நட பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் நடுத்தர வயதில் தொழிலை மாற்ற விரும்புவோர் தொழில் துறைக்கு தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.