சிங்கப்பூரில் அடுத்த மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய திட்டம்!!
SMRT நிறுவனத்தின் குத்தகைத்தாரர்களுக்கு புதிய திட்டம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அவர்கள் பணியிடப் பாதுகாப்பு நடைமுறைகளில் பயிற்சி பெற உள்ளனர்.
இதனை நேற்று நடைபெற்ற குத்தகையாளர் பாதுகாப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இதில் சுமார் 2000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. ஒரு நாள் பயிற்சியில் உண்மை சம்பவங்களின் எடுத்துக்காட்டோடு நடத்தப்படும்.
குத்தகையாளர் பாதுகாப்பு கருத்தரங்கில் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
பொதுப் போக்குவரத்து துறையில் சேவை வழங்கும் அனைத்து தரப்பினர்களுக்கும் பயிற்சி நீட்டிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தெரிவித்தார்.
நடைபெற்ற கருத்தரங்கில் 10 குத்தகையாளர்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன.
அந்த விருதுகள் கடந்த ஓராண்டில் பணியிடத்தில் விபத்து நேரமால் பார்த்துக்கொண்டதற்காக வழங்கப்பட்டன.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg