சிங்கப்பூர் தொழிலாளர் இயக்கம் இளம் ஊழியர்களுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அவர்கள் புதிய வேலைகளை ஆராய்வதற்கும் ,வாழ்க்கைத் தொழிலைத் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Career Starter Lab என்றழைக்கப்படும்.இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி நிலையங்களில் புதிதாக பட்டம் பெற்றவர்களும் தேசிய சேவைகளை முடித்தவர்களும் பயன்பெறுவர்.
இளம் ஊழியர்கள் வேலையில் சேர்வதற்கு ஏற்ற தரமான பயிற்சி திட்டம், வழிகாட்டி திட்டம் முதலியவை உதவி புரியும்.
இப்புதிய திட்டத்தின் முன்னோடி திட்டத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சேரும்.
3 மாத வேலைப் பயிற்சிகள் 300 முதல் 600 இளையர்களுக்கு அளிக்கப்படும்.
இந்த புதிய திட்டத்திற்கு இளைஞர்கள் எப்பொழுது விண்ணப்பிக்கலாம்?
பட்டம் பெற்றவுடன் ஓராண்டுக்குள் அல்லது தேசிய சேவை முடிவடைந்ததும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் இளைஞர்களும், நிறுவனங்களும் சரியான வேலையில் சேர்வதற்கு உதவும்.
இப்புதிய திட்டத்தின் முன்னோடி திட்டம் இறுதியில் பட்டதாரிகளுக்கு முழுநேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படலாம்.
இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் திட்டம் தொடங்கவிருக்கிறது.