Singapore News in Tamil

பிளாஸ்டிக் பைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்காக புதிய திட்டம்!

வரும் ஜூலை 3-ஆம் தேதியிலிருந்து Fairprice பேரங்காடிகளில் கொடுக்கப்படும் பைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு சிலரால் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருக்கலாம். அதனால் அவர்களுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உதவியாக இருக்கும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தற்போது 7 Fairprice பேரங்காடிகளில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து பேரங்காடிகளிலும் அதனை அறிமுகம் செய்ய Fairprice நிறுவனம் முயற்சி செய்கிறது.

Fairprice, Cheers கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு 10 காசு கட்டணம் வாங்குகின்றனர்.

அதோடு,சொந்த பைகளைக் கொண்டு வருமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கின்றனர்.

70 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த பைகளை கொண்டு வருவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிப்பது நல்ல யோசனையாக இருந்தாலும், மக்கள் பைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த பழகிக் கொள்வார்கள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மறுசுழற்சி பிளாஸ்டிக் பைகள் Fairprice பேரங்காடிகளுக்கு வெளியே வைக்கப்படும்.