சிங்கப்பூரில் மே மாதம் புதிய SAFRA நிலையம் திறக்கப்பட உள்ளது. இந்த இடம் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்த உதவும்.Choa chu kang யில் இந்த நிலையம் திறக்கப்பட உள்ளது.
இது சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. சுமார் 600 சூரியச் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள 36 கட்டிடங்கள் மட்டுமே சிங்கப்பூர் உயரிய பசுமை முத்திரை பெற்றிருக்கிறது. இந்த நிலையத்தின் நோக்கம் அனைத்து கட்டிடங்களும் சிங்கப்பூர் உயரிய பசுமை முத்திரைப் பெற வேண்டும் என்று விரும்புகிறது.
சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதால் 100 நான்கறை வீடுகளுக்கு ஓராண்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற இயலும். இப்புதிய நிலையம் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையத்தில் பெரிய உடற்பயிற்சி கூடம் உள்ளது.சுமார் 240 பேர் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கால்பந்து திடல், கூரை வேய்ந்த நீச்சல் குளம் ஆகிய வசதிகளும் இருக்கிறது. இதன் மூலம் 90 ஆயிரம் தேசிய சேவையாளர்கள் பயன்பெறுவர்.