வீட்டு வேலை செய்வதற்கு பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே ஹவுஸ் பெர்மிட் மூலம் வருவார்கள். வீட்டு வேலை செய்து வரும் பெண்கள் கடினமாக உழைத்தாலும் அவர்களின் சம்பளம் குறைவு.
பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் வேலை நேரத்தை விட அதற்கும் அதிகமான நேரத்தில் வேலையையும், விடுமுறை கொடுக்காமலும் அதற்கான உரிய சம்பளம் கிடைக்காமலும் வேலை செய்து வருகின்றனர். அதனால், M.O.M என்ற அமைப்பில் அதிக புகார்கள் வந்து கொண்டு இருந்தது.
இதனால் மாதத்திற்கு ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறையைக் கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளனர்.இப்புதிய விதிமுறை இந்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.புதிய விதிமுறையின் படி விடுமுறை கொடுக்கவில்லை என்றால் MOM-ல் புகார் கொடுக்கலாம்.