நியூசிலாந்தில் கல்வியறிவு விகிதம் சரிந்து வருவதை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதம மந்திரி கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை மூலம் மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடாக நியூசிலாந்து விளங்கியது.
ஆனால் தற்போது கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் நாட்டில் உள்ள 15 வயதுடைய மாணவர்கள் எண்ணிக்கையில் 33 சதவீதம் பேருக்கு எழுதவோ படிக்கவோ தெரியவில்லை.
எனவே நியூசிலாந்தின் கல்வியறிவு விகிதங்களை அதிகரிப்பதற்காக இந்த நடைமுறையை அமல்படுத்தப் போவதாக லக்சன் கூறினார்.