Latest Sports News Online

சிங்கப்பூர் மதுபான கூடங்களுக்கு உணவகங்களுக்கு புதிய விதிமுறை!

சிங்கப்பூரில் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செயல்படும் மதுபானக்கூடங்களில், உணவகங்களில் ஆகியவற்ற இடங்களில் மதுபானம் விற்க, அருந்துவதற்கு அனுமதிக்கப்படும் நேரங்களைக் குறிக்கும் அறிவிப்புகள் வைக்கப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறை மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இவ்வாறு காவல்துறை தெரிவித்தது.

காவல்துறையும்,உள்துறை அமைச்சகமும் மதுபான விற்பனைத் தொடர்பான விதிமுறைகளை மறு ஆய்வு செய்து இருக்கிறது. மதுபான விற்பனை உரிமம் பெற்ற இடங்களின் விதிமுறைகளை மறு ஆய்வு செய்தது.

மதுபானம் விற்க உரிமம் பெற்ற கடைகள் புதிய விதிமுறையின் படி 1A, 1B, 2A, 2B ஆகிய பிரிவுகளில் கீழ் மதுபான விற்கப்படும் நேரங்களைக் குறித்தும் அறிவிப்புகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அல்லது அதற்கு அதிகமான அறிவிப்புகள் வைத்திருக்க வேண்டும்.

இவைகள் பொதுமக்கள் பார்க்கும்படி தெளிவாக வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அறிவிப்புகளைக் கடை நுழைவாயில், உணவு வாங்கும் இடம், கழிவறைகள் போன்ற இடங்களில் வைக்கலாம் என்று பரிந்துரைக்கப் படுகிறது.

இந்த புதிய விதிமுறை மீறுபவர்களுக்கு 10000 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது. புதிய விதிமுறை குறித்த தகவல்களைக் குறித்து உரிமம் பெற்ற கடைகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.