பிரான்சில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!!

பிரான்சில் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பிரான்சில் 7200 புகைப்பிடிக்க அனுமதி இல்லாத இடங்கள் உள்ளன. தற்போது மேலும் கூடுதலாக ஒரு சில இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

பிரான்சில் காடுகள், பொது பூங்காக்கள்,கடற்கரைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் புகை பிடிக்க தடை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இனிமேல் பிரான்சில் புகைப்பிடிக்காத பகுதிகள் இருக்கும் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை தற்போது 11 யூரோ.

இது 2025-ஆம் ஆண்டுக்குள் 12 யூரோக்களாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்சிகெரட்டுகளை தடை செய்ய பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.