மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்!! வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!!

மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்!! வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த என்னென்ன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்!!

▪️நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை கட்டுமானம், உற்பத்தி போன்ற துறைகளில் மட்டும் வேலைக்கு சேர்க்கலாம்.


▪️அதன்பின் ஊழியர்களுக்கான வேலை அனுமதி அட்டையை நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

▪️சிங்கப்பூரில் முறையான பணி அனுமதி அட்டை வைத்திருக்கும் பணியாளர்களை மட்டுமே பணியமர்த்த முடியும்.

▪️மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மாதந்திரம் சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
அதில் மருத்துவ செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்றவையும் அடங்கும்.


▪️ஒவ்வொரு துறைக்கும் சில விதிமுறைகள் உள்ளன அவற்றை முறையாக பின்பற்றி நிறுவனங்கள் நடக்க வேண்டும்.

▪️ஒவ்வொரு பணியாளருக்கும் கண்டிப்பாக மருத்துவக் காப்பீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

▪️சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரால் மருத்துவப் பரிசோதனைக்காக பணியாளர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும்.

▪️அத்தகைய பரிசோதனையில் ஊழியரின் உடல் நிலையில் ஏதேனும் உடல்நலக்குறைவு இருப்பது கண்டறியப்பட்டால், அவரது பணி அனுமதி அட்டை ரத்து செய்யப்படலாம்.

▪️நிறுவனங்கள் ஒவ்வொரு பணியாளருக்கும் மாதாந்திர வெளிநாட்டு ஊழியர் வரியைச் செலுத்த வேண்டும்.

ஊழியர்களின் கவனத்திற்கு…

▪️ஒர்க் பெர்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையை மட்டுமே நிறுவனத்தில் செய்ய வேண்டும்.

▪️பிற தொழில்களில் ஈடுபடவோ அல்லது சொந்தத் தொழிலைத் தொடங்கவோ கூடாது.

▪️முதலாளிகளால் வேலையின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட முகவரியில் மட்டுமே தொழிலாளர்கள் தங்க வேண்டும். ஊழியர்கள் வேறு இடத்தில் தங்க திட்டமிட்டால், அவர்கள் தங்கள் முதலாளிக்கு அதை தெரிவிக்க வேண்டும்.

▪️பணி அனுமதி அட்டையை எப்போதும் கையில் வைத்திருப்பது அவசியம்.

 

சிங்கப்பூரில் ஒவ்வொரு துறைகளுக்கும் சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன? தெரிந்து கொள்ள மனிதவள அமைச்சகத்தின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Link :https://www.mom.gov.sg/passes-and-permits/work-permit-for-foreign-worker/sector-specific-rules