சிங்கப்பூரில் நவம்பர் 23 அன்று செய்தியாளர்களின் சந்திப்பில் கிரிப்டோகரன்சி DPT ( டிஜிட்டல் பேமண்ட் டோக்கன்) சேவைகளில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்த உள்ளதாக MAS சிங்கப்பூர் நாணய ஆணையம் ( MAS) தெரிவித்து உள்ளது.
DTP வர்த்தகமானது ஒரு நிலைதன்மை அற்றவை.ஆனால் பெரும்பாலான சில்லறை வியாபாரிகள் தங்களின் உள்ளூர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வர்த்தக விதிமீறல் செயல்களால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு செய்வதனால் ஏற்படும் சிக்கல்களை முறையாக அறியாமல் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் பல்வேறு நிதி இழப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இதனை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக , சில்லறை வியாபாரிகள் அதாவது அங்கீகாரம் பெறாத நிறுவனதாரர்கள் DPT வர்த்தக முதலீடு செய்ய ” உள்ளூர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த அனுமதி இல்லை ” என்று MAS ஆணையம் கூறியுள்ளது.
இந்த நிபந்தனைகள் வரும் 2024 ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்படும் எனவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று கிரிப்டோ சேவை வழங்குநர்களும் , முறையான விதிமுறைகளின் கீழ் முதலீடர்களை வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
மேலும் போலி கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள் எனவும் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.