சிங்கப்பூரில் வழிகளை சுலபமாக கண்டறிய புதிய திட்டம்!!
தெங்கா பகுதிகளில் இனி வழிகளை கண்டறிவது சுலபம்..கிராப் நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய வரைபடம்…
சிங்கப்பூர்: புதுப்பிக்கப்பட வேண்டிய தெங்கா சாலைகளின் வரைபடங்கள் இப்போது ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த திட்டம் கிராப் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று கூறியுள்ளது.
தெங்கா பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் டெலிவரி டிரைவர்களுக்கான இடங்களுக்கு செல்லும் பாதைகளை வரைபடம் துல்லியமாக காண்பிக்கும்.
தெங்காவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், மற்ற பிரபலமான இடங்களைப் போல இங்கு இடம் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.
அந்தச் சிக்கலைத் தீர்க்க, கிராப் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்த திட்டம் அறிமுகமாகி உள்ளது.
வாராவாரம் தெங்கா பகுதியின் படங்களையும் சேகரிக்கும்.
இதன் மூலம் ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும்.
இதுவரை கிராப் நிறுவனமானது தெங்காவில் மக்கள் வசிக்கும் 6 பகுதிகளை வரைபடமாக்கத் தொடங்கியுள்ளது.
தெங்காவின் 22 பகுதிகளும் வரைபடத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here