Singapore News in Tamil

சிங்கப்பூரில் புதிய நடைமுறை!

நேற்று நாடாளுமன்றத்தில் புதிய மசோதாக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குடும்ப பராமரிப்புத் தொகை செலுத்துப்படுவதை உறுதி செய்வதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் நோக்கம் தேவையற்ற விண்ணப்பங்களை நீக்கி சட்ட முறையைச் சுலபமாக்கிக் குடும்பங்களுக்கு பணம் போய் சேர்வதை உறுதிப்படுத்துவதே.

பராமரிப்பு தொகை மனைவி,பிள்ளைகள்,நடமாட முடியாத கணவர் ஆகியோர்களுக்கு கிடைத்துவிட்டதை உறுதிசெய்யும் மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

குடும்ப பராமரிப்பு தொகையைச் செலுத்த தவறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த புதிய மசோதா வகை செய்யும்.

சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மனுதாரர்கள் எவ்வளவு பராமரிப்புச் செலுத்த இயலும் என்பதை நிர்ணயிப்பதற்கு சமந்தப்பட்டவர்களின் நிதி நிலவரத்தைக் கொண்டு பரிந்துரை முன்வைப்பார்கள்.

குடும்பங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.அவர்களுக்கு நிலையான பராமரிப்பு தொகை கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய இந்த புதிய நடைமுறையின் மூலம் முடியும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.