மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

நாட்டில் குறைந்தபட்சம் எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் பாதுகாப்பான ஆன்லைன் சூழலை பயனர்களுக்கு உறுதி செய்வதற்காக புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

இதனை மலேசியாவின் இணையக் கட்டுப்பாட்டாளர் ஜூலை 27-ஆம் தேதி தெரிவித்தது.

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி தளங்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற ஜனவரி 1-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு முதல் விண்ணைப்பிக்க வேண்டும்.இது பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக உரிமம் பெறும் நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது.

Meta(Facebook,Instagram,Whatsapp), Google(YouTube,Google Chat), Tik tok,Telegram மற்றும் × ஆகிய தளங்கள் அரசாங்கத்திடம் இருந்து உரிமம் பெற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது மோசடிகள்,ஆன்லைன் மோசடி,சைபர் கொடுமைப்படுத்துதல்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுப்பதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை பாதுகாப்பான ஆன்லைன் சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த பயனர் அனுபவத்தை உருவாக்கும்.அதில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான சூழலை அளிக்கும்.

அரசாங்கத்திடம் இருந்து பெற்ற உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி தளங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவைகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற உரிமம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு உரிமம் பெறாமல் இருந்தால் அது ஒரு குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.உரிமம் பெற தவறிய தளங்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று MCMC கூறியது.