ஜூலை 1 முதல் S Pass மற்றும் Work Permit ஊழியர்களின் முதலாளிகள் ஏற்படுத்தி தரவேண்டிய மருத்துவ காப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுகிறது.
இனி, காப்பீட்டுக்கு கோரப்படும் தொகை ஆண்டுக்கு $60,000 ஆக உயர்த்தப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு குறைந்தபட்சம் $15,000 வரை கோரப்படுகிறது.
தற்போது மருத்துவ செலவுகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முதலாளிகள் தங்களது பணிப்பெண்களுக்கும் , ஊழியர்களுக்கும் செலுத்தும் மருத்துவ கட்டணங்களைக் குறைக்க இந்த புதிய நடைமுறை உதவும்.
இந்த புதிய நடைமுறை பணிப்பெண்களின் முதலாளிகளுக்கும் பொருந்தும். இதனை மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.
தற்போது $15,000 மருத்துவ காப்பீட்டு கோரல் தொகை.
ஐந்து விழுக்காடு வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்கள் தற்போதைய மருத்துவக் காப்பீட்டு கோரல் வரம்பைத் தாண்டி உள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
இது போன்ற அதிக செலவுகளை ஆண்டுக்கும் கிட்டத்தட்ட 1000 க்கும் அதிகமான செலவுகளை முதலாளிகள் எதிர்நோக்குகின்றனர்.
இதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத்தில் மனிதவள மூத்த துணை அமைச்சர் கூறியிருந்தார்.
அதிக மருத்துவ காப்பீட்டுக்கு ஏற்பாடு செய்வதோடு, மருத்துவக் கட்டணத்திற்கான கோரிக்கை விடுக்கும்போது, மொத்த கோரிக்கையில் முதலில் மருத்துவ காப்பீட்டு கோரல் தொகையைக் கழித்து, அதில் மீதமுள்ள தொகையில் 25 சதவீதம் முதலாளிகள் கொடுக்க வேண்டும் என்பது புதிய விதி.