சிங்கப்பூரில் டெலிவரி ஊழியர்களுக்கு உதவ புதிய திட்டங்கள்!!

சிங்கப்பூரில் டெலிவரி ஊழியர்களுக்கு உதவ புதிய திட்டங்கள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டெலிவரி ஊழியர்களின் சிரமத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. டெலிவரி ஊழியர்கள் உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை நாள் முழுக்க முதுகில் சுமந்து கஷ்டப்பட்டு உழைத்தாலும் மாத இறுதியில் குறைவான வருமானமே ஈட்டுகின்றனர்.அவர்கள் சற்று தாமதமாக வந்தால் கூட ரேட்டிங் உள்ளிட்டவற்றை குறைத்து விடுவதாக சிலர் கூறுகிறார்கள். மேலும் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் போன்ற வசதிகளை கூட அனுமதிக்க விடுவதில்லை.

இது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் டெலிவரி ஊழியர்களின் சிரமத்தை குறைக்க சுமார் 2000 ஊழியர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. அதில் அவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் பார்க்கிங் பகுதிகளில் கட்டணமில்லா சேவை காலத்தை நீட்டிப்பது குறித்தும் ,QR குறியீடுகளுடன் எளிதாக நுழைவது போன்ற திட்டங்கள் குறித்து பேசப்பட்டன.

கடந்த மாதம் நகரச் சீரமைப்பு ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புகள் நடத்திய கலந்துரையாடலில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ,போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் ஜூரோங் பாயின்ட் கடைப்பகுதி மற்றும் Lake Grande கூட்டுரிமை வீட்டு பகுதிக்கும் சென்று திட்டங்களை செயலாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.

இரு இடங்களிலும் உள்ள வசதிகளை பார்வையிட்டார்கள்.

கடைப்பகுதி நிர்வாகத்திற்கும்,டெலிவரி டிரைவர்களுக்கும் இடையிலான வாட்ஸாப் தொடர்புகள், அவர்கள் காத்திருப்பதற்கான தனிப்பட்ட இடங்கள் என பல உள்ளன.