Singapore Job News Online

சிங்கப்பூரில் புதிய வீடுகளுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கப் புதிய திட்டம்!

பிப்ரவரி,6-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee, சிங்கப்பூர் மக்களுக்கு கட்டுப்படியான விலையிலும் விரைவிலும் வீடுகள் கிடைக்கும் என்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

அடுத்த ஆண்டு புதிய வீடுகள் அதிகமாக கட்டப்படும்.ஏனென்றால், புதிய வீட்டுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கிருமி பரவல் காலத்திற்கு முன்பு இருந்த நிலையைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. கிருமி பரவல் காலத்துக்கு முன்பிருந்தது போல், சுமார் 3,000 வீடுகளை 2025-ஆம் ஆண்டுக்குள் விற்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வீடுகளுக்காக சிங்கப்பூர் மக்களுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள். கணிசமான புதிய வீடுகள் குறைவான நேரத்தில் கிடைப்பதற்கு இந்த திட்டம் வழிவகுக்கும்.

அரசாங்கம் கட்டுமானத் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மறு சீரமைக்கப்படும் என்றார்.

அரசாங்கம் அவசரத் தேவை உள்ளவர்களுக்கும் இன்னும் சிறந்த வகையில் வீடுகளை ஒதுக்குக்கும் வழிகளை ஆராய்ந்து செய்து வருகிறது.

இந்த திட்டத்தில் பொதுமக்களின் யோசனைக்கு ஏற்ப, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் திருமணம் செய்ய இருப்போர்க்கும், சிறு பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கும் திட்டங்கள் இருப்பதாக Desmond Lee கூறினார்.