உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!!

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!!

சிங்கப்பூர்: உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான பதக்கங்களில் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஜூலை மாதம் உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப்பை நடத்தும் முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 100,000 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர்.

பதக்கங்களை வடிவமைப்பதற்கு சுமார் 100,000 உலோகக் கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விளையாட்டுத் துறையை பசுமையாக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு இவை பதக்கங்களாக மாற்றப்படும்.

சுமார் 5,000 பதக்கங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பதக்கத்திற்கும் 20 பிளாஸ்டிக் பாட்டில்கள் தேவை. இதன் எடை சுமார் 150 கிராம். பிளாஸ்டிக் பாட்டில்கள் பதக்கத்தைத் தாங்கும் கயிறாக மாற்றப்படும்.

இந்த புத்தாக்கம் முயற்சியில் ஏற்பாட்டுக் குழு பசுமை நிதி குழுவுடன் இணைந்து செயல்படுகிறது.

இந்தப் போட்டியில் முடிந்தவரை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பசுமை முயற்சிகளுக்கு பங்களிப்பார்கள்.

போட்டியின் முடிவில், அரசாங்கம் உலக நீர் விளையாட்டு மற்றும் Sports SG ஆகியவற்றுடன் ஒரு பசுமை முயற்சி அறிக்கை பகிர்ந்து கொள்ளப்படும்.