சிங்கப்பூரில் அண்டை வீட்டாரின் இரைச்சல் தொடர்பான சச்சரவுகளை சமாளிக்க புதிய நடவடிக்கை…!!

அண்டை வீட்டாரின் இரைச்சல் தொடர்பான சச்சரவுகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை...!!

அண்டை வீட்டாரின் இரைச்சல் தொடர்பான சச்சரவுகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அண்டை வீட்டாரிடையே ஏற்படும் தகராறுகளை சமாளிக்க புதிய அரசு பிரிவு ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அரசு பிரிவில் சட்ட அமைச்சகம், கலாச்சாரம், சமூக விவகாரங்கள் மற்றும் இளைஞர் அமைச்சகம் மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சகம் ஆகியவை பங்கு வகிக்கும்.

அண்டை வீட்டாரின் சத்தம் தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அரசு பிரிவிற்கு சமூக உறவுகள் பிரிவு என்று பெயர்.

சமூக உறவு பிரிவானது 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சமூக தகராறு மேலாண்மை கட்டமைப்பின் கீழ் செயல்படும்.

அந்த அமைப்பு அண்டை வீடுகளுக்கிடையே நடைபெறும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் செயல்படும்.

சமூக தகராறு தீர்வு திருத்த மசோதாவின் மூலம் இந்த கட்டமைப்பின் புதிய அம்சங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

முன்மொழியப்பட்ட சட்டங்கள், சமூக உறவுகள் பிரிவு (CRU) எனப்படும் புதிய அரசாங்கப் பிரிவுக்கு அதிகாரங்களை வழங்கும்.

இந்த பிரிவு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து வாக்குமூலம் பெறவும், வீடுகளுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிக்கவும் அதிகாரிகளுக்கு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்கும்.

மேலும் சமரசப் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவும், அண்டை வீடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தம் போடுவதைத் தடுக்கும் உத்தரவுகளை வழங்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here ⬇️