சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!!

ஊழியர்கள் பணி இடங்களில் இன-சமய ரீதியாக பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்.அவர்களுக்காக புதிய சட்டம் அறிமுகமாக உள்ளது.

சிங்கப்பூரில் பணியிடங்களில் இனம் சார்ந்த பாகுபாடுகளை ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என உள்துறை அமைச்சர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஜாதி, மதம் அல்லது மொழியின் அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று முதலாளிகளை வலியுறுத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

வன்முறையற்ற இனவாதம் குறித்த கருத்தரங்கில் அவர் இதுகுறித்து பேசினார்.

இது கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் மற்றும் உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் திரு லீ சியன் லூங் 2021-ஆம் ஆண்டு நடந்த தேசிய தின உரையில் வேலைவாய்ப்பு நியாயச் சட்டம் பற்றி பேசியிருந்தார்.

இதை ஒரு முக்கியமான சட்டம் என்று கூறிய திரு.சண்முகம், அதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இன மற்றும் மத வெறுப்பைத் தூண்டுவதற்கு எதிராக சிங்கப்பூரில் ஏற்கனவே கடுமையான சட்டங்கள் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்று கூறிய திரு.சண்முகம், சட்டப்படி அனைவருக்கும் சமமான பாதுகாப்புக்கு உரிமை உண்டு என்றார்.