சிங்கப்பூரில் புதிய சட்டம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மோசடி செய்பவர்களிடம் Singapass விவரங்களை பகிர்ந்து கொள்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க உதவ பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Singpass விவரங்களை 2020-ஆம் ஆண்டிலிருந்து 2022-வரை பகிர்ந்து கொள்ள 19,000 மேற்பட்டவர்கள் முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறை விசாரித்திருந்தது.
ஆனால், அதில் 250 க்கும் குறைவானவர்களிடம் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது
புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், கள்ளப் பணத்தை நல்ல பணமாக singapass மூலம் மாற்ற உதவுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எளிதாகும்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு சில சட்டங்களில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டது.அதாவது, கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டம், போதைப்பொருள் கடத்தல், ஊழல், மற்ற கடுமையான குற்றங்கள் ஆகிய தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டது.
இப்போது, singpass விவரங்களை மோசடிகாரர்களிடம் தருபவர்களில் பிடிபடுபவர்கள் மீது காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் அவர்களின் நோக்கத் திட்டத்தை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறதாக உள்துறை அமைச்சகம், அறிவார்ந்த தேச,மின்னிலக்க அரசாங்க அலுவலகமும் குறிப்பிட்டது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த புதிய சட்டம் உதவும்.