சிங்கப்பூரில் புதிதாக கட்டப்பட உள்ள ஜமா சூலியா மரபுடைமை நிலையம்!!

சிங்கப்பூரில் புதிதாக கட்டப்பட உள்ள ஜமா சூலியா மரபுடைமை நிலையம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள சைனாடவுன் பகுதியில் ஜமா சூலியா மரபுடைமை நிலையம் கட்டப்பட உள்ளது.

அதற்கான கட்டிட நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸீல்கிஃப்லி
கலந்து கொண்டார்.

ஜமா சூலியா மரபுடைமை நிலையமானது சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்தின் வளமான வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.

மக்களின் தேவைகளுக்காக நிலையத்திற்கு அருகிலேயே உணவகங்கள்,குடியிருப்புகள்,சில்லலை வர்த்தகக் கடைகள் இருக்கும்.

இது பகோடா ஸ்ட்ரீட்டில் உள்ள போருக்கு முந்தைய நான்கு வீடுகளும், மோஸ்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய கட்டிடத்துடன் இணைக்கப்படும்.

ஜமா சூலியா பள்ளிவாசல் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. தற்போது சீரமைக்கும் பணியானது நிறைவுற்றது.

பள்ளிவாசலுக்கு பின்புறத்திலேயே மரபுடைமை நிலையமானது அமையும். இதில் புதிய வகுப்பறைகள், சமூக வெளிப்புற அரங்கு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட தொழுகை இடங்கள் ஆகியவையும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.