சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!!

சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய கல்லூரி!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இஸ்லாமியக் கல்லூரி முழுநேரப் பட்டப் படிப்பை வழங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் இஸ்லாமிய கல்வி அல்லது சமூக அறிவியல் ஆகிய துறைகளில் படிக்கலாம் என தெரிவித்துள்ளது.

M-CUBE இன் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் மாநாட்டில் பிரதமர் இது தொடர்பாக பேசினார்.

மலாய் முஸ்லிம் சமூகத்தின் இலக்குகள் அடைவதற்கான முயற்சிகள் குறித்து பேசினார்.

MUIS எனப்படும் இஸ்லாமிய மத மன்றம் மற்றும் MENDAKI ஆகியவை M-CUBE அமைப்பில் இணைந்துள்ளன.

2029 இல் கேலாங் செராய்யில் தஞ்சோங் காத்தோங் வளாகம் மீண்டும் திறக்கப்படும் போது MENDAKI தலைமையகம் அமைந்திருக்கும் என்று கூறினார்.

இந்த மன்றம் மலாய் முஸ்லிம் சமூகத்தை சென்றடைவதற்கான முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த உதவும் என்று கூறப்பட்டது.

கம்போங் கிளாமில் உள்ள மலாய் பாரம்பரிய மையத்தில் புதிய கண்காட்சி அரங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கண்காட்சியில் வைக்கப்படும் காட்சிகள் சிங்கப்பூரில் மலாய் மக்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டது.