Singapore news

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள்

விமானம் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி தீ பிடித்தது.

இதில் பயணித்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனை அடுத்து அங்கு சென்று மீட்பு குழுவினர் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் உடலை தவிர மற்ற அனைவருடைய உடல்களும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இறுதி சடங்குகள் பொக்காராவில் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் அவர்களுக்கான இறுதி சடங்குகள் நடைபெறும்.

இதில் அடையாளம் காணாத உடல்களும்,வெளிநாட்டு பயணிகளின் உடல்களும் நேபாளத்தில் உள்ள காட்மாண்டு நகருக்கு அனுப்பப்படுகிறது. அங்கு மேல்விசாரணைக்காக அனுப்பப்படுகிறது.