சமூக ஊடகங்களில் இளம் மருத்துவர்கள் உரிய சம்பளம் முறைக் குறித்து கேள்வி எழுப்பட்டது.அதற்கு சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
பொது சுகாதார பராமரிப்பு துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஆகியோருடைய சம்பளம் அவ்வபோது அதை மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
மறு ஆய்வின் படி இந்த மாதம் ஜனவரி,1-ஆம் தேதியிலிருந்து தகுதியுள்ள இளம் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் ஆகியோர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
MOH ஹோல்டிங்ஸ், பொது சுகாதார பராமரிப்பு குழுமம் இணைந்து மருத்துவர்களின் சம்பளம் போட்டித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதாக அமைச்சகம் தெரிவித்திருந்தது.
வருகிற பிப்ரவரி,1- ஆம் தேதியிலிருந்து அவசர சேவை பிரிவு மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கான இரவு நேர ஊக்கத்தொகை விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது.
MOH ஹோல்டிங்ஸ், பொது சுகாதார குழுமம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரவு நேரம், வார இறுதி, பொது விடுமுறை ஆகியவற்றைக்கான ஊக்கத்தொகையில் மாற்றம் ஏற்படும். அவர்களின் பணிமூப்புத் தகுதியின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் என்றும் அதில் தெரிவித்திருந்தது.
வருகிற பிப்ரவரி மாதம்,1- ஆம் தேதியிலிருந்து புதிய ஊக்கத்தொகை அறிமுகம் பட உள்ளது.அதாவது, வார இறுதியில் மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதிக்கும் மருத்துவர்களின் ஊக்கத்தொகை 160 இலிருந்து 275 வெள்ளி வரை புதிய ஊக்கத்தொகைக் கொடுக்கப்படும்.
இவ்வாறு சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சகம் பதில் அளித்து இருந்தது.