சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!!

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் அடுத்த மாதம் 10,000 BTO வீடுகளை விற்பனைச் செய்ய உள்ளது.

காலாங்/வாம்போ,குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் மற்றும் யீஷூன் ஆகிய இடங்களில் சுமார் 5,000 புதிய வீடுகள் அமைந்துள்ளன.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீதமுள்ள 5,500க்கும் மேற்பட்ட வீடுகளை கழகம் விற்பனைச் செய்ய உள்ளது.

மீதமுள்ள வீடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

2021 மற்றும் இந்த ஆண்டுக்குள் 100,000 வீடுகளை விற்பனை செய்வதற்கான இலக்கை நோக்கிச் சீராக நகர்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழக மறுவிற்பனை வீடுகளின் விலைகள் முந்தைய ஆண்டின் காலாண்டில் 2.5 சதவீதம் அதிகரித்தன.

இது ஒப்பிடக்கூடிய மூன்றாம் காலாண்டு மறுவிற்பனை வீட்டு விலை உயர்வை விட 0.2 சதவீதம் குறைவாகும்.

ஆரம்ப மதிப்பீடுகளின்படி, கடந்த ஆண்டு மறுவிற்பனை வீட்டு விலை வளர்ச்சி 9.6 சதவீதத்தை தாண்டியது.

குறைந்த வீடுகள் விற்பனைக்கு வருவதாலும் அதன் தேவை அதிகரிப்பினாலும் மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.