சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!

சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது .

எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன.

அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது.

கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 ஆம் ஆண்டில் இருந்ததை போல் சுமார் 10 மடங்கு அதிகமாகும் .
மாத அடைப்படையில் கடந்த மாதம் 45.4 சதவீதம் வளர்ச்சி கண்டது.

ஜனவரி மாதம் சுமார் 1100 வீடுகள் விற்பனையாகின.