Google நிறுவனம் சிறிய,நடுத்தர நிறுவனங்களின் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்த உதவ புதிய இலவச இணைய வகுப்புகள் அறிமுகப்படுத்துகிறது.
அதன்மூலம் சுமார் 300 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறுவர்.
சுமார் பதினையாயிரம் பேருக்கு மின்னிலக்கச் சந்தை போன்ற புதிய துறைகளில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
யாருக்கு அந்த வாய்ப்பையும், உபகார சம்பளத்தையும் தரலாம் என்பதைத் தேர்வு செய்வதற்கு Enterprise Singapore,SG Tech உதவி செய்யும்.
ஆறு மாதத்திற்குள் பயிற்சி பெறும் ஊழியர், அவர் பணி புரியும் துறையில் அங்கீகாரம் பெறுவார்.
ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க பணம் இல்லை என்று சொல்லும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கைகொடுக்க விரும்புவதாக Google நிறுவனம் சொன்னது.
2020-ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 9,000 க்கும் அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி செய்திருக்கிறது.