Singapore Job News Online

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான இணைய கற்றல் தளத்தில் புதிய அம்சம்!

சிங்கப்பூரில் மாணவர்களுக்காக SLS என்றழைக்கப்படும் இணைய கற்றல் தளம் மூலம் மாணவர்கள் பாடங்களை விரும்பி படிப்பதற்கு உதவும் நோக்கில் அறிமுகம் செய்யப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த இணைய கற்றல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை ஆசிரியர்கள் வரவேற்பதாக கூறுகிறார்கள்.

மாணவர்களின் கற்றல் பயணத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திட்டங்களைப் படிபடியாக அறிமுகம் செயல் படுத்த உள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

இதன்மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திறம்பட பாடங்களைக் கற்பிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மின்னிலக்க கற்றல் மொழியை துமாசிக் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழாசிரியர் ஒருவர் தமது பாடத்திட்டத்தில் பயன்படுத்துகிறார்.

இணைய கற்றல் தளத்தில் மாணவர்கள் கேள்விகளுக்கான பதில்களைக் குரல்பதிவு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதன்பின் அவர்களுக்கான மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.