புதுப்பொலிவுடன் கோலாங் பூங்கா!!

புதுப்பொலிவுடன் கோலாங் பூங்கா!!

சிங்கப்பூர்: கேலாங் பார்க் இணைப்புச் சாலையின் விரிவாக்கம் பணி நிறைவடைந்ததை ஒட்டி அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

PUB தேசிய நீர் அமைப்பு மற்றும் தேசிய பூங்காக் கழகம் இணைப்பின் கட்டுமானத்தை நிறைவு செய்தன.

ஒரு துடிப்பான, சுத்தமான நீர் திட்டமான ABC நீர்நிலை திட்டத்தின் கீழ் பாதை விரிவாக்கப்பட்டது.

மவுண்ட்பேட்டன் சாலையில் இருந்து சிங்கப்பூரின் மையப்பகுதி வரை கேலாங் ஆற்றின் குறுக்கே 1.2 கிலோமீட்டர் தொலைவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பூங்கா உள்ளது.

மேலும் பூங்காவில் 60க்கும் மேற்பட்ட பல்வேறு தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இது சிங்கப்பூரை இயற்கை நகரமாக மாற்றக்கூடிய முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கேலாங் பூங்கா பாதையானது குடியிருப்பாளர்கள், பூங்கா பார்வையாளர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு வசதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.