ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது!!

முதுமை மறதி மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதற்கு முன் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.அது முதன்முறையாக Alexandra மருத்துவமனையின் சமூகச் சுகாதார நிலையத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த கருவி நோயாளிகளின் ரத்த அழுத்தம்,ரத்த கொழுப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து கூறும்.அதோடு மூளையை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு இந்த கருவி ஒரு நல்ல வழிக்காட்டி என்று கூறப்படுகிறது.

கருவியை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரின் வயதான மக்கள்தொகைக்கு நோய்களை முன்கூட்டியே கண்டறிவது அவசியம்.

அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை, வேலை செய்யும் முதியவர்களுக்காக மல்டி சர்வீஸ் சென்டரை திறந்துள்ளது. அது சிங்கப்பூரின் முதல் சமூகச் சுகாதார நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு இந்த நிலையம் முக்கியப் பராமரிப்பு இடமாக இருக்கும்.

நோயாளிகள் வீட்டில் இருந்து கொண்டே நோயை அவர்களே சமாளிக்கவும்,நம்பிக்கை பெறவும் உதவி வழங்கப்படும்.அவர்கள் துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாடுகிறார்கள்.

இத்தகைய சமூக சுகாதார மையம் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கும் போக்கைக் குறைக்கிறது.

இது மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg